தமிழகம்

மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து.. பாஜகவினர் மீது வழக்கு பதிவு !

சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கியதற்காக பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு வேண்டி பாஜகவினர் தீவிர கையெழுத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சென்னை மாவட்ட (தெற்கு) குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையும் படிங்க.. பெண்கள் வாழ தகுதியான நாடு: இந்தியாவின் இடத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க !

அதன்படி, போலீஸார் பாஜக மாநில செயலாளர் சூர்யா, முன்னாள் கவுன்சிலர் லியோ சுந்தரம், காரப்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் செயலாளர் கோட்டீஸ் வரன் உள்பட பாஜகவைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் மீது இளைஞர் நீதிச்சட்டம் 2015 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button