வணிகம்

சிக்கலில் இண்டிகோ.. சரிந்த பங்குகள்..!!!

இண்டிகோ விமான நிறுவனத்தின் பங்குகள்  திடீர் வீழ்ச்சியை கண்டன.

மும்பை, டிச.4, 2025; நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பெரும் இடையூறுவை சந்தித்ததை அடுத்து, டிசம்பர் 4 ஆம் தேதி, இன்று அதிகாலை வர்த்தகத்தில் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் பங்கு விலை கிட்டத்தட்ட 2% சரிந்தது. இந்த வார தொடக்கத்தில் தொடங்கிய இந்த இடையூறுகள் புதன்கிழமை வரை நீடித்தன, இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டியிருந்தது.

என்ன காரணம்?

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் புதன்கிழமை பிற்பகல் வரை 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையில், விரக்தியடைந்த பயணிகள் மீண்டும் முன்பதிவு செய்யவோ அல்லது புதுப்பிப்புகளைப் பெறவோ சிரமப்பட்டதால், முனையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகின.

இண்டிகோ பங்குகள் செயல்பாடு

கடந்த 5 நாள்களில் இண்டிகோவின் பங்கு விலை 6% சரிந்தது, கடந்த ஆறு மாதங்களில் அது 2% வருமானத்தை ஈட்டியது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை நிறுவனத்தின் பங்கு விலை 20% வருமானத்தை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ விளக்கம்

கடந்த ஒரு சில நாள்களாக விமாங்களை இயக்குவதில் பல செயல்முறைச் சிக்கல்களைச் சந்தித்துள்ளோம். பல பலரின் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் விமான நிலையங்களில் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிக நேரம் காத்திருக்கிறீர்கள். விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான கட்டணங்கள் திரும்ப அளிக்கப்படும். விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.

இண்டிகோவுக்கு என்னதான் பிரச்சினை? ஏன் பல மடங்கு அதிகரித்தது விமான கட்டணம்?

விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் பணி நேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) மத்திய அரசு கொண்டு வந்தது.

இதன்படி, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் உள்பட நாளுக்கு 8 மணி நேரம், வாரத்துக்கு 35 மணி நேரம், மாதத்துக்கு 125 மணி நேரம், ஆண்டுக்கு 1,000 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்தில் போதிய விமானிகள் எண்ணிக்கை இல்லாததால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டும் வருகின்றன. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குவிந்துள்ள இண்டிகோ விமானப் பயணிகளால் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி உள்நாட்டு விமான சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

அதன்படி, சென்னை-கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.60,000, சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான கட்டணம் ரூ.41,000, சென்னை-பெங்களூரு விமான கட்டணம் ரூ.17,000, சென்னை-தில்லி விமான கட்டணம் ரூ.36,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இண்டிகோ விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் விமான கட்டண உயர்வு பயணிகளுக்கு மேலும் இன்னல்களை தந்துள்ளது.

இதற்கிடையே, விமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை திரும்பப் பெறுவதாக விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான கட்டணம் திரும்ப தரப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button