
இந்தியாவில் 5ஜி சேவையை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் டெலிகாம் நிறுவனங்கள் முட்டிமோதும் நேரத்தில் சீனாவில் முதல் முறையாக 10 ஜி சேவை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் டெலிகாம் சேவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, டேட்டா தான் இந்த நவீனயுகத்தில் முக்கிய வர்த்தகமாக மாறி வரும் வேளையில் இண்டர்நெட் ஸ்பீட்-ஐ மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமான விஷயமாக உள்ளது. இந்த நிலையில் தான் சீனா முதல் முறையாக 10ஜி பிராண்ட்பேன்ட் சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதிவேக வலைத்தளம், அதிநவீன 50ஜி PON (Passive Optical Network) தொழில்நுட்பத்தின் பயன்படுத்துகிறது. இதேபோல் மேம்பட்ட பைபர் ஆப்டிக் கட்டமைப்பின் மூலம் இணைய வேகத்தை கிகாபிட் வரம்பிலிருந்து ஈர்க்கக்கூடிய 10-கிகாபிட் நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், தாமத நேரம் அதாவது Latency அளவை வெகுவாகக் குறைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 2 மணிநேர 4K குவாலிட்டி கொண்ட படத்தை வெறும் 5-10 நொடிகளுக்குள் டவுன்லோடு செய்ய முடியும். இந்த அதிவேக இண்ட்நெட் சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஹூவாய் மற்றும் சீனா யூனிகாம் Sunan பகுதியில் இருக்கும் ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது.

இந்த முதல் சோதனையில் டவுன்லோடு வேகம் 9,834 Mbps ஆகவும், அப்லோடு ஸ்பீட் 1,008 Mbps ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வலைத்தளம் மிகக் குறைந்த Latency அளவை கொண்டு இருந்ததையும் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதாவது வெறும் 3 மில்லிசெக்ண்ட் மட்டுமே பதிவானது என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




