இந்தியாஉலகம்

விமான விபத்தில் உயிர்தப்பிய தனியொருவன்…! (வீடியோ)

அகமதாபாத் விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்…! அந்த அதிசயம் நடந்தது எப்படி? என்பதை பார்ப்போம்.

அகமதாபாத் ஜூன் 12 2025:

உயிர் தப்பிய நபர்

அகமதாபாத் விமான விபத்தில் பயணித்தவர்கள் கரிக்கட்டையாக ஆன நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம் நடந்தது. அவர் பிரிட்டிஷ்காரர். விஷ்வாஸ் குமார். வயது 38. கீழே குதித்து காயங்களுடன் எழுந்து நடந்தார்.

உயிர் தப்பி மீண்டெழுந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சீட் நம்பர் 11Aவில் இருந்த அவர், எப்படி தப்பித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11A இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு வலது பக்கத்தில் உள்ளது.

விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே 11A இருக்கை அமைந்துள்ளது.

விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார்.

விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி சுதாரித்து விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார் விஷ்வாஸ் குமார் ரமேஷ்.

இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கவலை அடைந்தோம்: டாடா குழும தலைவர் சந்திரசேகரன்

விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்: டாடா குழும தலைவர் சந்திரசேகரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button