அரசியல்இந்தியாஉலகம்

பங்களாதேஷில் மீண்டும் ஆட்சி மாற்றம் ..! இந்தியாவின் வியூகம்…

டாக்கா மே 29 2025:

வங்காள தேசத்தில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கிறது. இந்த முறை ஆட்சி மாற்றத்தை நடத்த இருப்பது இந்தியா. நடத்தி காட்ட இருப்பது இந்தியாவின் ரா அமைப்பு. ராவின் கட்டளையை நிறைவேற்ற இருப்பவர் இப்போதைய வங்காளதேச ராணுவ தளபதி வேக்கர்ஸ் உஸ் ஜமான்.

வங்காள தேசத்தில் இந்தியாவின் ரா அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ அமைப்பும் இடையே சுமார் 50 ஆண்டுகளாக ஆடு புலி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்பொழுது நடைபெறும் RAW vs CIA ஆன புலி ஆட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் ராவின் கையே ஓங்கி இருக்கிறது என்பதற்கு அங்கு இப்பொழுது நடைபெற்று வரும் சம்பவங்களே சாட்சி.

வங்காள தேசத்தின் ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்ஸ் உஸ் ஜமான், வங்காள தேசத்தின் இடைக்கால ஆட்சியாளராக இருக்கும் அமெரிக்க அடிமை முகம்மது யூனிஸை “தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வாருங்கள், அல்லது ராஜினாமா செய்யுங்கள்” என்று கூறியதால் வங்காள தேச அரசியலில் மாற்றங்களுக்கான அறிகுறிகள் ஆரம்பித்து விட்டன.

வங்காள தேசத்தின் சட்ட ஒழுங்கு ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. ராணுவம் முகம்மது யூனிஸை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்கிற செய்திகள் வருகின்றன. வங்காள தேச அரசியலில் வேக்கர்ஸ் உஸ் ஜமான் இன்னொரு காலித் முசராப் மாதிரி வங்காள தேச ஆட்சியை கவிழ்த்த இன்னொரு ராணுவ தளபதி ஆக உருவாகலாம்.

இப்போதைய வங்காள தேச ராணுவ தளபதியான வேக்கர்ஸ் உஸ் ஜமான் யார் தெரியுமா?

ஷேக் ஹசீனாவின் மருமகன் மாதிரியான உறவைக்கொண்டவர். ஷேக் ஹசீனாவின் முதல் ஆட்சியில் அதாவது 1996-ல் வங்காள தேசத்தின் ராணுவ தலைவராக இருந்த முஸ்தாபி சுர் ரஹ்மானின் மருமகன். அதாவது முஸ்தாபி சுர் ரஹ்மானின் மகள் சரக்னாஸ் கமலிகா ரஹ்மானின் கணவர் தான் வேக்கர்ஸ் உஸ் ஜமான்.

ஷேக் ஹசீனா யார் தெரியுமா? வேக்கர்ஸ் உஸ் ஜமானின் மாமனாரான முஸ்தாபி சுர் ரஹ்மானுக்கு மருமகள் உறவை கொண்டவர். ஆக, இப்போதைய வங்காள தேச ராணுவ தளபதி முன்னாள் வங்காள தேச பிரதமரும் இந்தியாவின் நெருங்கிய நண்பரான ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உறவினர். இதனால் தான் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி வேக்கர்ஸ் உஸ் ஜமானை ராணுவ தளபதியாக நியமித்தார்.

ஷேக் ஹசீனாவிற்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் இறுதியில் ராணுவ புரட்சி நடைபெறலாம் என்று இந்தியாவின் ரா அளித்த அறிவுரையை கேட்டுக்கொண்டு அவருடைய நெருங்கிய உறவினரான வேக்கர்ஸ் உஸ் ஜமானை ராணுவ தளபதியாக கொண்டு வந்த ஷேக் ஹசீனா, அடுத்து ரா கூறிய “மாணவர் போராட்டங்களை மென்மையாக கையாளுங்கள்” என்பதையும் காதில் வாங்கவில்லை.

அதனால் தான் ஆட்சியை இழந்து விட்டு, உயிர் பிழைக்க இந்தியாவிற்கு வந்து விட்டார். அவரை இந்தியாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது இப்போதைய ராணுவ தளபதி வேக்கர்ஸ் உஸ் ஜமான் தான். ஷேக் ஹசீனா, அவரது தந்தை முஜிபுர் ரஹ்மான் மாதிரியே, ராவின் சில அறிவுரைகளை காதில் வாங்கவில்லை என்பதால் தான் ஆட்சியை இழந்தார்.

ஷேக் ஹசீனா கூட பரவாயில்லை – ராவின் அறிவுரையை கேட்காமல் ஆட்சியைத்தான் இழந்தார். ஆனால் அவருடைய தந்தை முஜிபுர் ரஹ்மான், ராவின் அறிவுரையை கேட்காமல் உயிரையே இழந்தார்.

வங்காள தேசத்தில் RAW vs CIA மோதல் இப்பொழுது ஆரம்பமாகவில்லை. அது 1971-ல் வங்காள தேசம் தனி நாடாக உருவானபொழுதே ஆரம்பித்துவிட்டது.

வங்காள தேசத்தின் முதல் ஆட்சியாளரான பங்கபந்து முஜிபுர் ரஹ்மானை – அதாவது ஷேக் ஹசீனாவின் தந்தையை – அமெரிக்காவின் சிஐஏ ராணுவ புரட்சி மூலம் கொல்ல நினைத்தது. இதற்காக உங்களுடைய அமைச்சர் முஸ்டாக் அகம்மதுவும் துணை போகிறார் என்று ராவின் தலைவர் ராமேஸ்வர் நாத் காவ் 1975 மே மாதம் டாக்காவிற்கு சென்று முஜிபுர் ரஹ்மானை நேரில் சந்தித்து “உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறியிருந்தார்.

ஆனால் முஜிபுர் ரஹ்மான் அதை கேட்கவில்லை. “என் மக்கள், என் ராணுவம், இவர்கள் எப்படி என்னை கொல்ல நினைப்பார்கள்?” என்று ராவின் தலைவர் ஆர் என் காவ் அவர்களின் ஆலோசனையை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

அதன் விளைவு? 1975 ஆகஸ்டு 15 – இந்திய சுதந்திர தினம்! அன்றே வங்காள தேசத்தில் ராணுவ புரட்சி நடைபெற்றது. ஜியா உர் ரஹ்மான் பின்னால் இருந்து இயக்கம் நடத்தினார். இரண்டாம் நிலை ராணுவ தளபதிகள் மூலமாக, முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தில் இருந்த 10 பேர் கொல்லப்பட்டார்கள். ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ஷேக் ரஹானாவும் மேற்கு ஜெர்மனியில் இருந்ததால் தப்பித்தனர்.

பங்கபந்து குடும்பம் அழிக்கப்பட்ட பிறகு, அமெரிக்க ஆதரவுடன் முஜிபுர் ரஹ்மானுக்கு கீழ் வர்த்தக அமைச்சராக இருந்த கண்டகர் முஸ்டாக் அகம்மது ஜனாதிபதியாக ஆனார். ஆனால் ராவின் உதவியுடன் பிரிகேடியர் காலித் முஸ்ரப் தலைமையில் 1975 நவம்பர் 3ம் தேதி முஸ்டாக் அகம்மதுவின் ஆட்சியை வீழ்த்தினார்கள்.

ஜியாவுர் ரஹ்மான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அபு தாகிர் தலைமையில் ஒரு குழு காலித் முஸ்டாகை படுகொலை செய்து, ஜியா உர் ரஹ்மானின் கீழ் வங்காள தேசத்தை கொண்டு வந்தது.

ஜியாவுர் ரஹ்மான் 4 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தார். 1981 மே 30-ல் அவரும் முஜிபுர் ஆதரவு ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மது அபுல் மன்சூரின் தலைமையில் உருவான ராணுவ புரட்சியில் சிட்டகாங் சர்க்யூட் ஹவுஸில் படுகொலை செய்யப்பட்டார்.

பின்னர் முகம்மது எர்ஷாத் ஆட்சியை கைப்பற்றி “மக்கள் ஆட்சி” என்ற பெயரில் ஷேக் ஹசீனா மற்றும் கலிதா ஜியா ஆட்சியை மாறி மாறி கவனித்தனர். இதனால் ராணுவ புரட்சி முடிந்தது. CIA வேலைகள் ஓய்ந்தன.

2009-ல் ஷேக் ஹசீனா பிரதமரான சில நாட்களில் CIA ராணுவ புரட்சியை உருவாக்க முயன்றது. பில்கானா படுகொலைகள் அதற்குக் குறிக்கோள். BDR ரைபில்ஸ் படை கலகத்தில் 56 ராணுவ அதிகாரிகள் மற்றும் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். CIA ஆதரவு… ஆனால் ராவின் உதவியுடன் ஷேக் ஹசீனா அதை முறியடித்தார்.

பில்கானா கலகம் பின் ரா ஆதரவுடன் வணக்கம் சொல்லி மறைந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ராவின் சில அறிவுரைகளை கேட்கவில்லை. அதனால் மக்கள் புரட்சி மூலமாக ஆட்சியை இழந்தார். ஆனால் வேக்கர்ஸ் உஸ் ஜமான் அவரை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்பினார்.

2009 பில்கானா கலகத்தில் கைது செய்யப்பட்ட 300 பேரை முகம்மது யூனிஸ் விடுவிக்க உத்தரவு போட்டுள்ளார். இது வேக்கர்ஸ் உஸ் ஜமானுக்கு கோபத்தை உண்டாக்கி, அவரை எதிர்த்துப் போராட வைக்கிறது.

மேலும், முகம்மது யூனிஸ் ராணுவ ஆலோசகர் கம்ருல் ஹாசனை ராணுவ தளபதியாக கொண்டு வர CIA திட்டமிட்டிருக்கிறது. அதற்கு எதிராகவே வேக்கர்ஸ் உஸ் ஜமான் சில வேலைகளை செய்து வருகிறார்.

வங்காள தேசம் மீண்டும் ஒரு ராணுவ புரட்சி நடைப்பெறும் வாய்ப்பு இருக்கிறது. அந்த புரட்சி RAW vs CIA-வின் ஆடுபுலி ஆட்டத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. ரா ஆதரவுடன் இயங்கும் வேக்கர்ஸ் உஸ் ஜமான், சிஐஏ ஆதரவு உடன் இயங்கும் முகம்மது யூனிஸை வீழ்த்தி காட்டுவார்.

நன்றி: Vijayakumar Arunagiri

நன்றி : செய்திக்கதிர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button