அரசியல்இந்தியாஉலகம்தமிழகம்

சர்வதேச மற்றும் தேசிய அளவில் இன்றைய முக்கிய செய்திகள்…

போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88.

பிப்.14 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் 38 நாட்களுக்கு பின் வீடு திரும்பியிருந்தார்.

ஈஸ்டர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு ஆசி வழங்கியிருந்தார் போப் பிரான்சிஸ்.

தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ்தான்.

2013 மார்ச் 13இல் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகித்தார்.

போர்களை முடிவுக்கு கொண்டுவந்து உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியவர் போப் பிரான்சிஸ்.

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு

தொடர்ந்து போப் மரணம் குறித்து உலகெங்கும் உள்ள தேவாலயங்களுக்குத் தெரிவிக்கப்படும். இதையடுத்து உலகெங்கும் உள்ள தேவாலயங்கள் துக்கத்தில் தங்கள் மணிகளை ஒலிப்பார்கள். வாடிகனில் போப் வாழ்ந்த இல்லம் பூட்டப்படும். அவரது ஆட்சி முடிவுக்கு வந்ததைக் குறிப்பிடும் வகையில் போப் மோதிரம் மற்றும் முத்திரையை அழித்துவிடுவார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு போப் மரணம் குறித்து அறிவிக்கப்படும்.

போப் இறுதி சடங்கு என்பது அவர் உயிரிழந்து 4-6 நாட்களுக்குள் நடக்க வேண்டும். உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக போப் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார்.

************

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது  பாரதிய ஜனதா கடும் தாக்குதலை தொடுத்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவர், ”இந்துக்கள் மீதான வெறுப்பின் காரணமாக முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே மம்தா பானர்ஜி புறக்கணித்தார்” என்றார்.

புது டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக எம்.பி.யும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, “மம்தா பானர்ஜி இந்துக்களை வெறுக்கிறார்” என்றார். தொடர்ந்து, “முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக இதுபோன்ற அட்டூழியங்கள் நடத்தப்பட்டிருந்தால், பானர்ஜி அங்கேயே கிளர்ச்சி செய்து முகாமிட்டிருப்பார்” எனவும் விமர்சித்தார்.

**************

பெங்களூருவில் முன்னாள் கர்நாடக மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஞாயிறு(ஏப்.20) மாலை மரணமடைந்துள்ளார். ஹெச்எஸ்ஆர் லேயவுட் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சடலமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ள நிலையில், அவரது மனைவி பல்லவி காவல் கட்டுப்பாட்டு மையமான 112-க்கு தொடர்புகொண்டு “நான்தான் கொலை செய்தேன்” என ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போலீசார் விசாரணையில், பல்லவி ஓம் பிரகாஷ் முகத்தில் மிளகாய்த் தூள் வீசி, பின்னர் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது தோழிக்கு வீடியோகால் செய்து “நான் அந்த ராட்சஸனை கொன்றுவிட்டேன்” என கூறியதும் தெரியவந்துள்ளது.

*************

“புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு” – எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்.

புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை.

தரம், அச்சில் அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும்.

கள்ளநோட்டில் RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-க்கு பதில் A இருப்பதாக மத்திய அரசு விளக்கம்.

இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாக மத்திய அரசு எச்சரிக்கை.

வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க அறிவுறுத்தல்.

***************

போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கு ஜாமீன்.

போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் ஜாமின்.

மணிஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து ஜாமின் வழங்கிய நீதிபதி சுந்தர் மோகன்.

***************

மோடி – வான்ஸ் சந்திப்பு

டில்லியில் பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு; இரு நாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button