இந்தியாதமிழகம்வணிகம்

தட்கல் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்!  புதிய அப்டேட்!

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணங்களின் போது ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. முன்பதிவு நேர மாற்றம் முதல் பயணிகளுக்கான கட்டுப்பாடு வரை இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவசர அவசரமாக டிக்கெட் முன்பதிவு செய்வதை எளிதாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு முன் புதுப்பிக்கப்பட்ட தட்கல் விதிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அதோடு ஏஜென்ட்களுக்கான டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் மதியம் 12:00 மணி வரையில் ரயில் டிக்கெட் ஏஜென்ட்கள் தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியாது. இதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயணிகள் நியாயமான முறையில் தட்கல் டிக்கெட்களைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button