செப்டம்பர் 6 ஆம் தேதி காவலர்கள் நாள் கொண்டாடப்படும் – முதல்வர் மு க ஸ்டாலின்

செப்டம்பர் 6ஆம் தேதி காவலர்கள் நாள் கொண்டாடப்படும் என்றும், சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருதுகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை ஏப்ரல் 29 2025
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 102 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி,
புதிய காவல் நிலையங்கள்,புறக்காவல் நிலையங்கள் உட்கோட்டங்கள் பிரிவுகள் உருவாக்கப்படும்
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் புதிய காவல் நிலைய உருவாக்குதல்
- திருநெல்வேலி மாவட்டம் மேல்ச்செவலில் புதிய காவல் நிலையம் உருவாக்குதல்
- திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளமருதூரில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்
- நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் புதிய காவல் நிலையம் உருவாக்குதல்
- திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கோவிலில் காவல் நிலையம் உருவாக்குதல்
- கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் புதிய இருப்புப் பாதை காவல் நிலையம் உருவாக்குதல்
- மதுரை மாநகர காவல் ஆணையர் சிந்தாமணி புதிய காவல் நிலையம் உருவாக்குதல்
- மதுரை மாநகரக் காவல் நிலையம் ஆணையரகத்தில் மடக்குளத்தில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்
- சென்னை பெருநகர திருவல்லிக்கேணி ஓமந்தூர் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் புற காவல் நிலையம் அமைக்கப்படும்
- சென்னை பெரிய நகரம் பெரம்பூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் புற காவல் நிலையம் அமைக்கப்படும்
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் புதிய காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும்
- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புதிய காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும்
- நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிய காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதற்கு காவல் துறைதான் காரணம்.

சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண்தான் விழுந்திருக்கிறது.
சாதி, மதக் கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள்; ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி என பல தடைகளை தாண்டி சாதனை.
இது கட்சியின் அரசு அல்ல; ஒரு கொள்கையின் அரசு என செயல்பட்டு வருகிறோம்; இது தனிமனித சாதனை அல்ல அமைச்சரவையின் சாதனை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காலனி என்ற சொல் நீக்கப்படும் – முதல்வர்.

அரசு ஆவணங்கள், பொதுப் புழக்கத்தில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும்.
மண்ணின் ஆதிக் குடிகள் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் காலனி என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் இனி நீக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அதிமுக அமளி

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைக்கான முதலமைச்சரின் பதிலுரைக்கு அதிமுக எதிர்ப்பு
முதல்வரின் பதிலுரையில் அதிமுக குறித்து கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என அதிமுக அமளியில் ஈடுபட்டது.




