
குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 1,000 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அகமதாபாத், ஏப்.26 2025:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் சூரத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தங்கி இருந்த சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட வங்கதேச நாட்டினரை மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
இன்று (ஏப்.26 2025) நடந்த இந்த அதிரடி நடவடிக்கைக்கு, சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG), குற்றப்பிரிவு, மனித கடத்தல் தடுப்புப் பிரிவு (AHTU), குற்றப்பிரிவு தடுப்பு (PCB) மற்றும் உள்ளூர் காவல் குழுக்கள் உள்ளிட்ட பல அமலாக்கப் பிரிவுகள் தலைமை தாங்கின.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 1000 பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அதிகாலை 3 மணியளவில் அகமதாபாத்தில் 450 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சந்தோலா பகுதியில் ஆவணமற்ற குடியேறிகள் அதிக அளவில் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் கைது
இதற்கிடையில், இந்த நடவடிக்கையின் போது 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் அஜித் ராஜியன் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து அகமதாபாத்தின் குற்றப்பிரிவு இணை காவல் ஆணையர் ஷரத் சிங்கால் பேசுகையில், “ஏப்ரல் 2024 முதல், இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் 127 சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 77 பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ளனர்” என்றார்




