
அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
சென்னை ஜூன் 1 2025:

அ.இ.அ.தி.மு.க., சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக இன்பதுரை, செங்கல்பட்டு தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அதிமுகவில் தேமுதிக நீடிக்கிறதா என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

“தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024 ல் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள்
அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை. அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம். ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது”
”அதிமுக கூட்டணியில் தொடர்வோமா? என்பதை அடுத்தாண்டு ஜனவரி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்” என பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் தேமுதிக தொடர்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




