தமிழகம்

விலகியது விகடன் தடை- இணையதளத்தை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு !

முடக்கப்பட்ட விகடன் இணைய தளத்தை விடுவிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி இந்தியர்கள் சிலரின் கை, கால்களில் விலங்கிட்டு, டொனால்ட் டிரம்ப் அரசு அவர்களைத் தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிய நிகழ்வைக் குறிக்கும் வகையில், விகடன் இதழ் மோடியின் கை, கால்கள் விலங்கிடப்பட்டதைப் போல ஒரு படம் வெளியிட்டது.

இந்த விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார். இதையடுத்து விகடன் இணையதளம் ஒன்றிய அரசால் முடக்கப்பட்டது.

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் (IFWJ) உள்ளிட்ட அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

இதையும் படிங்க.. இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவிற்கு பெருமைதான்- அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சி

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி பரதச் சக்கரவர்த்தி விகடன் இணையதளத்தை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் பத்திரிகை உலகம் சற்றே மகிழ்ச்சியடைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button