கோட்டை விட்டார் விஜய் – கே.எஸ்.ஆர்

கோட்டைவிட்டார் விஜய்: அரசியல் ஆலோசகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
விஜய்க்கு ஆலோசனை சொல்லி வந்ததை வெளிப்படையாக கூறி, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

பனையூரில் இரும்புக்கதவை பூட்டிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத தமிழக வார்டு மெம்பர் அளவில் கூட அரசியல் அறிவற்ற புதுச்சேரி அரசியல்வாதி புஸ்ஸி ஆனந்தையும், அன்புமணி ராமதாஸையும், சித்தராமையாவையும் ஜான் ஆரோக்கியசாமி என்கிற உலகமகா ஸ்ட்ராஜிஸ்ட்டையும் நம்பி, 20% வரை வாக்குகள் இருக்கிறது அதிமுகவுடன் கூட்டு வைத்தால் நல்ல எதிர்காலம் என நாங்கள் சொன்னதை கேட்காமல் இந்த இரு ஞானசூஞங்களை நம்பி கோட்டைவிட்டார் விஜய்.
இது தகர்ந்து, இதனால் நான் கடந்த ஜனவரி முதல் விஜய் உடன் பெரிதாகவும் பேசவில்லை . வைகோ, விஜயகாந்த் முதல் விஜய் வரை தமிழகத்தில் மாற்று அரசியல் வரும் போது, என் போன்றவர்கள் நம்பிக்கை கொண்டோம். அந்த நம்பிய நோக்கில் வெற்றி பெற பெற முடியவில்லை. என்ன செய்வது!? வருத்தமான கையறு நிலை….என்ன சொல்ல…..!

அரசியல் ஒன்றும் சினிமா அல்ல, ஒரு படத்தில் விட்டால் அடுத்த படத்தில் பிடிக்க. இப்போது என்ன செய்வார் விஜய். 2026 ஐ மறந்து விட வேண்டியதுதான், அடுத்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பாண்டிச்சேரி அரசியல்வாதியையெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்ய வைத்தால் இதுதான் நிலை…




