
மாநிலங்களவையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 128 உறுப்பினர்களின் வாக்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிராக 95 எம்.பிக்கள் வாக்களித்தனர். பெரும்பான்மை வாக்குகளின் மூலம் இந்த சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இன்று மாநிலங்களவையிலும் ஒப்புதல்பெற்றது.




