தமிழகம்
சென்னை விமான நிலைய சுங்கத் துறையின் 10 உயரதிகாரிகள் கூண்டோடு பணியிடமாற்றம்

சென்னை ஏர்போர்ட் சுங்கத்துறை அதிகாரிகள் 10 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை முதன்மை ஆணையர் சீனிவாச நாயக், கூடுதல் துணை ஆணையர் பெரியண்ணன், துணை ஆணையர்கள் சரவணன், அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், உதவி ஆணையர் சுதாகர் உள்ளிட்ட 10 பேர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை முதன்மை ஆணையராக தமிழ்வளவன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




