
தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜ் போலீஸ் என்கவுன்ட்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ராய்ப்பூர், மே 22 2025:

மாவோயிஸ்ட் சி.பி.ஐ பொதுச்செயலாளர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜ் போலீசாருடன் நடந்த என்கவுன்ட்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கரின் அபுஜத்மத் காட்டுப்குதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டுள்ளார். இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் புதன்கிழமை (மே 21 2025) பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 27 மாவோயிஸ்டுகளில் பசவராஜுவும் ஒருவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பை சுட்டிக் காட்டி, “மாவோயிசத்தின் அச்சுறுத்தலை ஒழித்து, நமது மக்களுக்கு அமைதி மற்றும் முன்னேற்ற வாழ்க்கையை உறுதி செய்வதில் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், “கடந்த 72 மணி நேரமாக இந்த நடவடிக்கை நடந்து வருகிறது. புதன்கிழமை நடந்த மோதலில் 26க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்” என்று மாநில உள்துறை இணை அமைச்சர் விஜய் சர்மா தெரிவித்தார்.




