Uncategorizedஅரசியல்இந்தியா

குடியரசு தலைவருக்கு காலக்கெடு – மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு

குடியரசு தலைவருக்கு காலக்கெடு – மத்திய அரசு முடிவு.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலாவதியான மசோதாக்களுக்கு உயிரளிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக  மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது.

காலாவதியான மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு ஒரு மாதமும், குடியரசு தலைவருக்கு 3 மாதமும் காலக்கெடு விதித்து அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button