அரசியல்தமிழகம்

பா.ம.க வில் யாருக்கு அதிகாரம்…?

சென்னை ஜூன் 1 2025:

பா.ம.க.வில் யாருக்கு அதிகாரம்? – ராமதாஸுக்கா? அன்புமணிக்கா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பொறுப்பாளர்கள் நியமனத்தில் தேர்தல் ஆணையம் சொல்வது என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்திய அரசியல் சாசனத்தின் 19ஆம் பிரிவு ‘சங்கம் சேரும் உரிமையை’ (right to form associations) ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்த உரிமையின் கீழ் அரசியல் கட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஒரு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்கள். அவர்கள் சார்பான பொதுக்குழு உறுப்பினர்களே கட்சியின் அனைத்து நடைமுறைகளையும் தீர்மானிக்கின்றனர். இது இந்தியாவின் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.

இந்திய தேர்தல் ஆணையம் தான், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துகிறது. அதன் விதிகளின் படி, தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் ஜனநாயக முறைப்படி பொதுக்குழுவே தீர்மானிக்கிறது. முக்கிய பொறுப்பாளர்களை பொதுக்குழு தேர்வு செய்கிறது. இதர பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை தலைவருக்கு பொதுக்குழு வழங்குகிறது. அதாவது, தலைவருக்கு அதிகாரம் அளிப்பதே பொதுக்குழு தான்.

இந்திய தேர்தல் ஆணையம் தான், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துகிறது. அதன் விதிகளின் படி, தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் ஜனநாயக முறைப்படி பொதுக்குழுவே தீர்மானிக்கிறது. முக்கிய பொறுப்பாளர்களை பொதுக்குழு தேர்வு செய்கிறது. இதர பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை தலைவருக்கு பொதுக்குழு வழங்குகிறது. அதாவது, தலைவருக்கு அதிகாரம் அளிப்பதே பொதுக்குழு தான்.

இத்தகைய ஜனநாயக வழிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது. The Election Commission of India (ECI) emphasizes fair and democratic procedures in political parties to ensure transparency, internal democracy, and proper functioning in the political system. Internal Democracy in Parties – Political parties are expected to follow democratic processes for the election of their office bearers and leadership positions. The decision-making process should be transparent and based on the consensus or voting within the party.

ஜனநாயகப் படி பொதுக்குழு உறுப்பினர்களால் தலைவர் தேர்வு செய்யப்படாவிட்டால், அத்தகைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான் இந்தியாவின் சட்டம்.

கடந்த 2022ஆம் ஆண்டில் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்கப்பட்டார். இந்த “நிரந்தர தலைவர்” நியமனத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தலைவர் இருக்க முடியாது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கே கட்சியின் பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது. பாமகவின் இன்னொரு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பாமகவின் பொதுக்குழுவுக்கே உள்ளது.

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸால் நியமனம் செய்யப்படாத பொறுப்பாளர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்தால், அது பாமக தலைவர் அன்புமணி இராமதாஸால் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் என்கிற அடிப்படையில்தான் அவை செல்லத்தக்கவை ஆகும். அதாவது, பாமக தலைவரால் ஏற்கப்பட்ட நியமனங்கள் மட்டுமே செல்லத்தக்கவை ஆகும். பாமக தலைவரால் நிராகரிக்கப்படும் நியமனங்கள் செல்லாது என்பதே சட்டம்.

மொத்தத்தில், பாமக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அங்கீகரிக்கும் நியமனங்கள் மட்டுமே செல்லும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்க.

இந்த விவகாரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்: section 29A of the Representation of the People Act, 1951 என்பதை காண்க.

குறிப்பு: மேலே உள்ளவை சட்டப்படியான கருத்துகள் ஆகும்.

பதிவு: அருள் ரத்தினம், செயலாளர், பசுமைத் தாயகம் – பாமக

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button