கட்சிப்பதவி ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ

சென்னை ஏப் 20 2025
மதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தின் முடிவில் ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார். மல்லை சத்யாவை கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
சென்னை, எழும்பூரில் நடந்த மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பேசினார்கள்.

இதனிடையே நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மல்லை சத்யாவை கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என வைகோ மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

நிர்வாகிகளின் வலியுறுத்தலையடுத்து துரை வைகோ ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




