Uncategorized

ஆச்சரியமாய் குறைந்த தங்கம் விலை !

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தினை பொறுத்து, கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்ச்சியுடன் காணப்பட்டு வருகிறது. இடையிடையே விலை குறைந்தாலும், அதற்குப் பிறகு மீண்டும் அதிகரித்து, புதிய உச்சங்களை எட்டுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது, ஆபரணத்தங்கம் கிராம் ரூ.8,050க்கு விற்பனையாகியது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒருகிராம் ரூ.110க்கும், ஒருகிலோ ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.120 குறைந்து, சவரனுக்கு ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒருகிராம் ரூ.8,215க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒருகிராம் ரூ.110க்கும், ஒருகிலோ ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button