பெண்கள் கண்முன் நிகழ்ந்த பஹல்காம் கொடூரம் – பழித்தீர்த்த இந்திய ராணுவ சிங்கப்பெண்கள்…!

பெண்களின் கண்ணீர் துடைத்த ஆபரேஷன் சிந்தூர் – பெண் அதிகாரிகளைக் கொண்டே விவரங்களை வெளியிட்ட இந்திய ராணுவம்.
புதுடெல்லி மே 6 2025 :

“நீதிக்கான தாக்குதல்”
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப்படைகளால் #OperationSindoor தொடங்கப்பட்டது
9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. கடந்த 3 தசாப்தங்களாக, பாகிஸ்தான் திட்டமிட்டு பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், ஆரம்ப மற்றும் புத்தாக்க படிப்புகளுக்கான பயிற்சி பகுதிகள் மற்றும் கையாளுபவர்களுக்கான ஏவுதளங்கள் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பாகும். இந்த முகாம்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் (PoJK) ஆகிய இரு பகுதிகளிலும் அமைந்துள்ளன
ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் இவற்றை கூறினார்கள்.

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?
எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது என்ற விவரங்கள்:
- மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
- மார்கஸ் தைபா, முரிட்கே -லஷ்கர் இ தொய்பா அமைப்பு
- சர்ஜால், தெஹ்ரா கலான் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
- மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் – ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு
- மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா – லஷ்கர் இ தொய்பா அமைப்பு
- மர்கஸ் அப்பாஸ், கோட்லி – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
- மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி – ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு
- ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் – லஷ்கர் இ தொய்பா அமைப்பு
- சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு.
- பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது” :
“எந்தவித தாக்குதலையும் சந்திக்க தயாராக உள்ளோம்” – இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்த்ரி கூறினார்.
பாக்.ல் 4 இடங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல்
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் காஷ்மீர் எல்லையில் நிலைநிறுத்தம்
பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது, பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம்
இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்த்ரி விளக்கம்
பொருத்தமான அஞ்சலி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியின் மனைவி இந்திய இராணுவ பதிலடியை தனது மறைந்த கணவருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி என்று பாராட்டியுள்ளார்.
“என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது, மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், எங்கள் நம்பிக்கையை அவர் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவர் நிம்மதியாக இருப்பார்,” என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறினார்.

இந்திய ராணுவ சிங்கப்பெண்கள்




