தமிழகம்

தமிழ்நாடு நாட்டின் மிக உயர்ந்த வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளது: முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளதாகவும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது: “9.69% வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலமாக உள்ளது. இந்த சாதனைக்கு பாலின சமத்துவம், சமூக நீதி மற்றும் சமச்சீர் வளர்ச்சி மாதிரியான திராவிட மாடல் முக்கிய காரணங்களாகும்.

அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button