இன்று “அபிஜித்” நட்சத்திர நேரம் – மிஸ் பண்ணிடாதீங்க

சென்னை ஏப் 21 2025

இன்று திங்கட்கிழமையில்
பிற்பகல் 12-25 முதல் 12-49 வரை உள்ள அபிஜித் நட்சத்திர நேரமான 24 நிமிடத்தை யாரும் தவற விடாதீர்கள்.
இந்த அபிஜித் நட்சத்திரம் இருக்கும் 24 நிமிட நேரத்தில், நாம் இறைவனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது அப்படியே கூடிய விரைவில் நடக்கும் என்பது உறுதி.
28 ஆவது நட்சத்திரமாக இருக்கும் இந்த சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரத்தை மனிதர்களிடம்-கொடுத்தால் அவர்கள் தவறாக பயன்படுத்தி கொள்வார்கள் என்பதற்காக கிருஷ்ண பரமாத்மா, இந்த நட்சத்திரத்தை தன்னுடைய மயில் இறகில் ஒளித்து வைத்ததாக நம்முடைய சாஸ்திரத்தில் உள்ள புராணக்கதைகள் சொல்லுகிறது.

அபிஜித் முகூர்த்தம் என்பது வேறு
அபிஜித் நட்சத்திரம் என்பது வேறு.
அபிஜித் முகூர்த்தம் என்பது தினம் தோறும் மதியம் 11:45 மணி முதல் 12:15 மணி வரை இருக்கக்கூடிய காலகட்டத்தை தான் அபிஜித் முகூர்த்த நேரம் என்று சொல்லுவார்கள்.
தினம் தோறும் இந்த அபிஜித் முகூர்த்த
நேரத்தில் நம்முடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொன்னாலும் நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இருந்தாலும் அதைவிட சக்தி வாய்ந்தது தான் இந்த அபிஜித் நட்சத்திர நேரம்.
சரி, இந்த அபிஜித் நட்சத்திர நேரம், இன்று திங்கட்கிழமை, எந்த குறிப்பிட்ட
24 நிமிடத்தில் வரஇருக்கிறது? அந்த நேரத்தில் எப்படி வேண்டுதலை இறைவனிடம் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏப்ரல் l 21ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12-25 முதல் 12-49 வரை உத்திராட நட்சத்திரம் (இதன் கடைசி இரண்டு பாதமிருக்கும் நேரம்), திருவோணம்
(இதன் முதல் இரண்டு பாதமிருக்கும் நேரம்)
இணையும் கால நேரமான
இடைப்பட்ட 24 நிமிடங்கள்
அபிஜித் நட்சத்திரம்
நேரம் இருக்கிறது.
இந்த அபிஜித் நட்சத்திர
நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கீழ்க்கண்ட மந்திரத்தை மூன்று முறை ஜெபிக்கவும்.
அபிஜித் சித்சக்தி துதி
அபிஜித ஆகமாந்து தீர அபஜிதாம்பர நட்சத்ராணாம் நாததீய ஜோதீனாம் நளகங்காதர
பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம் பவதவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம் !”
மேலும் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில்
வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய கிருஷ்ணரின் படத்திற்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

இன்று 21-4-2025 திங்கட்கிழமை பிற்பகல் 12-25 முதல் 12-49 வரை இருக்கும் அபிஜித்* நட்சத்திர நேரத்தைப் பற்றிய சிறப்பான தகவல்
கிருஷ்ணரின் படம் இல்லை என்பவர்கள் பெருமாளின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம்.
இப்படி தீபம் ஏற்றி வைத்த பிறகு அவருக்கு துளசி மாலையை சாற்றி மஞ்சள் நிற மலர்களை வைத்து உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை என்னவோ, எந்த பிரச்சனை உங்களுக்கு சரியானால் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நினைக்கிறீர்களோ அது சரியாக வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இயன்றவர்கள் மஞ்சள் நிறத்திலான லட்டுவை பெருமாளுக்கு முன்பாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தீபமேற்றி முடித்த பிறகு மேற்கண்ட அபிஜித் சித்சக்தித் துதியை
மூன்று முறை மனதார கூறி கிருஷ்ண பரமாத்மாவை மனதார நினைத்து உங்களுடைய பிரார்த்தனையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும்.
அபிஜித் நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும்.
இந்த நேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த தடங்கலும் இல்லை.

உத்திராடத்துக்கு கணபதி, திருவோணத்துக்கு திருமால், இவர்களை வணங்கி முதல் முறையாக அபிஜித் நட்சத்திர நேரத்தில்
என்ன பிரார்த்தனையை செய்கிறீர்களோ, அந்த பிரார்த்தனை நிறைவடையும் வரை, அடுத்தடுத்த மாதம் வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்திலும், ஒரே பிரார்த்தனையாக தான் வைக்க வேண்டும்.
மாற்றி மாற்றி பிரார்த்தனை செய்யும் போது வேண்டுதலுக்கான பலன் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்காது.
பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கிற்கு முன்பு உங்களுடைய வேண்டுதலை வைக்கலாம்.
நல்ல வேலை கிடைக்க, நோய் நொடி தீர, பிள்ளைகள் நன்றாக படிக்க, கடன் தீர இப்படி என்ன வேண்டுதலை வைத்தாலும் சரிதான்.
நீங்கள் என்ன வேண்டுதல் வைத்திருக்கிறீர்களோ, அது சம்பந்தப் பட்ட மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்யலாம்.
நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஹனுமன் மந்திரம்,
கடன் சுமை குறைய வேண்டும் என்றால் மகாலட்சுமி மந்திரம்,
பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால் குபேரர் மந்திரம்,
இப்படி உங்களுக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களை செய்து இந்த பிரார்த்தனையை இறைவனிடம் வைக்கலாம்.
அல்லது உங்கள் குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாட்டு மந்திரத்தை கூட சொல்லலாம் தவறு கிடையாது.
ஆக மொத்தத்தில்
அபிஜித் நட்சத்திரம் இருக்கும் இந்த 24 நிமிடங்களும் உங்களுடைய மனது ஒருநிலைப்பட வேண்டும்.
இந்த 24 நிமிடத்தில்
இந்த பிரபஞ்சத்திடம் நம்பிக்கையோடு உங்கள் பிரார்த்தனையை சொல்ல வேண்டும்.
அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.
நம்பிக்கை இல்லாமல் நாம் என்ன செய்தாலும் அது நிச்சயம் பலன் தராது.
நம்பிக்கையோடு இன்று வர இருக்கும் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தை (பிற்பகல் 12-25 முதல் 12-49 வரை) பயன்படுத்துங்கள்.
நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
அதன் மூலமும் நமக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு:
ஜித்’ என்றால் வெற்றி பெறுதல், ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது பொருள்.
அபிஜித் நட்சத்திரத்தை ஸ்ரீகிருஷ்ணர் சூடிக்கொண்டு முதன் முதலாக காட்சி அளித்தத திருத்தலம் திருக்கண்ணபுரம். அங்கு சென்று வழிபடுவது நலம் அளிக்கும் என்கிறார்கள்
இங்கு ஒவ்வொரு அமாவாசை தின அபிஜித் நட்சத்திர காலத்தில், அபிஜித் நட்சத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வாருக்கு பெருமாள் நடையழகுக் காட்டி சேவை சாதிக்கும் வைபவம் நிகழ்ந்து வருகிறது.
முடிந்தவர்கள் இன்று திருக்கண்ணபுரம் சென்று ஸ்ரீ விபீஷண ஆழ்வாருக்கு பெருமாள் நடையழகுக் காட்டி சேவை சாதிக்கும் வைபவத்தை
தரிசியுங்கள்.
இதனால் நிச்சயம் உங்கள் வாழ்வில் வெற்றிகளும் மங்கல நிகழ்வுகளும் கைகூடும் என்பது ஐதீகம்.




