உலகம்
அமெரிக்காவுக்கு சீனா பதிலடி…

சீனா மீது அமெரிக்கா 104% வரியை அமலுக்கு கொண்டு வந்தது.

சீனா மீது மொத்தமாக 104 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில் நேற்று முதல் வரி உயர்வு அமலுக்கு வந்தது.
34% பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், அமெரிக்கா இதனை நடைமுறை படுத்தியுள்ளது.
*சீனா பதிலடி*

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதி பொருள்களின் மீதான வரியை உயர்த்தியுள்ளது சீனா.
அமெரிக்க இறக்குமதி பொருள்களின் மீதான வரியை 84% உயர்த்தி சீனா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் எந்த வகையிலான போரையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் பதிலடி கொடுத்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 125% வரி விதித்த டிரம்ப் மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




