சினிமா

ரஜினிகாந்தின் “கூலி” படத்தோடு போட்டியிடும் “வார் 2”

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பாலிவுட் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ‘வார் 2’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அயான் முகர்ஜி இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.

ரஜினியின் ‘கூலி’ படத்துடன் ரூ.200 கோடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள’வார் 2′ திரைப்படம் வெளியாக உள்ளது. மிகப்பெரிய போட்டி இந்த இரண்டு படங்களிடையே உருவாகப்போவது உறுதி. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button