தமிழகம்

பிரேமலதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர்.. வரும் தேர்தலில் காட்சிகள் மாறுமா ?

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பிறந்தநாளையொட்டி, அவரை இன்று (மார்ச் 18) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார், என்று கூறப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக முதல்வரின் இந்த வாழ்த்து, அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக, திமுகவோடு கூட்டணி வைக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் ஆருடம் சொல்லி வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button