அரசியல்தமிழகம்

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம் – என்ன நடந்தது..?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார்.

பொற்கொடி இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார் எனவும், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

என்ன நடந்தது…?

பகுஜன் சமாஜ் (BSP) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தைக் கவனித்து கொள்ளவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் வகையிலும் பதவியிலிருந்து அவரை நீக்கம் செய்வதாக அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் சமாஜ் ராஜாராம் அறிவித்துள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் மீது அண்மையில் பொற்கொடி புகார் கூறியிருந்த நிலையில் தற்போது பொற்கொடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

அதாவது கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது தன்னுடைய ஆதரவாளர்களை பொற்கொடி திரட்டி ஆனந்தன் தனக்கு எதிராக காழ்புணர்ச்சியுடன் செயல்படுவதாக கட்சியின் மேலிட பிரதிநிதிகளுக்கு புகார் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button