# கீதை நூல் #நாட்டிய சாஸ்திரம் #யுனெஸ்கோ #யுனெஸ்கோ அங்கீகாரம் #பிரதமர் மகிழ்ச்சி
-
ஆன்மீகம்
யுனெஸ்கோ உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் – பிரதமர் மகிழ்ச்சி
யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புதுதில்லி, ஏப்ரல் 18, 2025 யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும. நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்துக்கும், வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்! யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்திற்கும், வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமாகும். கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரிகத்தையும் உணர்வையும் வளர்த்து வந்துள்ளனஅவற்றின் நுண்ணறிவுத் திறம் உலகிற்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. @UNESCO” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »