அரசியல்தமிழகம்

அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகள் – சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 9 புதி அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல் 28 2025

தமிழக சட்டபேரவையில் இன்று அரசு ஊழியர்களின் நலனுக்காக 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி,

அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு.

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது – முதலமைச்சர்.

ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படுகிறது.

பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்டம்பர் 30க்குள் அறிக்கை.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம்.

சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.1,000 ஆக உயர்வு.

பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும்.

பழைய ஓய்வுதியம் திட்டம்
தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button