உலகம்

அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து..!

அமெரிக்காவில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வானில் மோதிக் கொண்ட கோர விபத்தில் இதுவரை 19 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக வெளியாகியுள்ள தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இருந்து வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு 60 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டுச் சென்றது. அமெரிக்க நேரப்படி இரவு 9 மணி அளவில், ரீகன் விமான நிலையத்தின் 33 ஆவது ஓடுபாதையில் இறங்குவதற்கு திட்டமிட்ட விமானம், 3 பேருடன் வானில் பறந்து கொண்டு இருந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில், 64 பயணிகளுடன் இருந்த விமானமும், ஹெலிகாப்டரும் வெடித்து போடோமேக் நதியில் விழுந்தன.

தகவல் அறிந்து விரைந்த வாஷிங்டன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள், விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், இதுவரை 19 பேரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமான விபத்தில் உயிர் தப்பியவர்களுக்கான வாய்ப்பு குறைவு என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button