சமையல்

இருட்டுக்கடை டேஸ்ட்ல.. ஒரு பிரட் அல்வா ரெசிபி !

இருட்டுக்கடை அல்வா கேள்விப்பட்டிருப்பீங்க.. பிரெட் அல்வா பற்றி தெரியுமா உங்களுக்கு ? கேக்கும்போதே சாப்பிடணும்னு தோணுதுல்ல.. வாங்க அதை எப்படி பண்ணணும்னு தெரிஞ்சுக்கலாம் !

முதல்ல தேவையான பொருட்களை கவனமா எடுத்து வைச்சுக்கோங்க..

பிரட் ஸ்லைஸ்- 6
சர்க்கரை -1/2 கப்
காய்ச்சிய பால் – 1/2 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 8
திராட்சை -10
ஆரஞ்சு புட் கலர் – சிட்டிகை

இப்போ ஒரு கடாயில் சர்க்கரை போட்டு கால் கப் நீரூற்றி தீயில் வைத்து கிளறி முதல் பாகு தயார் பண்ணிடுங்க.. அப்புறமா சின்ன சின்னதா நறுக்கிய பிரட் துண்டுகளை அதில் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைச்சிடுங்க..

இதையும் படிங்க.. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங்க் ப்ரோ.. ஆண்டு விழாவில் விஜய் அசத்தல் பேச்சு!!

பிரெட் துண்டுகள் சர்க்கரை பாகில் ஊறியதுக்கு அப்புறம் பிசுக் பிசுக் னு நல்லா மசிச்சிடுங்க.. அப்புறம் இதில் பால் மற்றும் கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து பால் சுண்டும்வரை அடுப்பில் வைத்துக் கிளறுங்க.. கலவை கெட்டியானதும் கொஞ்சம் கொஞ்சமா நெய் சேர்த்துக்கோங்க.. இறக்கும் முன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்துக் கிளறி கலவை கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை ஆஃப் பண்ணி, கிண்ணத்தில் எடுத்து வைச்சிடுங்க.. ஏலக்காய் சேர்ப்பது அவரவர் சாய்ஸ். இப்போ சுவையான ப்ரெட் அல்வா ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button