லைஃப் ஸ்டைல்

காதலுக்காக எதையும் செய்யும் ராசிக்காரர்கள் இவங்கதான் !

பணத்தை விட சக்திவாய்ந்த ஒரு விசயமாக காதலை சொல்லலாம். காதலின் சக்தி மகத்தானது மற்றும் இணையில்லாதது. எவ்வளவு பெரிய தடையையும் தாண்டி ஒருவரை அடையும் சக்தியையும், ஆற்றலையும் காதல் கொடுக்கும்.

அவர்களின் இந்த குணத்திற்கு அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பணத்தை விட காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

ராசி சக்கரத்தின் அன்பான ஆன்மாக்களான கடக ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் அன்பை விட பணம் முக்கியமானதல்ல. அவர்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அனைத்தையும் விட உயர்வாகக் கருதுகிறார்கள். தங்கள் அன்புக்குரியவர்கள் காயப்படுவதைப் பார்க்க அவர்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. கோடி முறை அவர்களிடம் பணத்தைக் கொடுத்தாலும் அவர்கள் எப்போதும் அன்பைதான் தேர்ந்தெடுப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் பணமா அல்லது காதலா என்று வரும்போது அவர்கள் எப்போதும் காதலுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். காதலுக்கும், அன்புக்கும் இடையில் போட்டி வைக்கும்போது அவர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் காதலின் பக்கம் சாய்வார்கள். அவர்களை பணக்கஷ்டத்தில் இருந்தால் கூட தங்கள் துணையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எதார்த்தவாதிகள் மற்றும் லாஜிக்காக சிந்திக்கக் கூடியவர்கள், ஆனால் காதல் தொடர்பான விஷயங்கள் என்று வரும்போது அவர்கள் தங்களின் லாஜிக்கை புறந்தள்ளிவிட்டு காதலைத் தேர்ந்தெடுப்பார்கள். தங்கள் அன்புக்குரியவர் ஆபத்தில் இருந்தாலோ அல்லது அவர்களுக்கு தங்களின் உதவி தேவைப்பட்டாலோ எவ்வளவு பணத்தை இழந்தாலும் அவர்களிடம் ஓடிச்சென்று விடுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் மிகவும் பிடிவாதமானவர்கள், எனவே அவர்கள் ஒருபோதும் தங்கள் காதலை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் காதல் மற்றும் விருப்பங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனவே அவர்கள் ஒருபோதும் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. பணம் ஒரு நாள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள், அதேசமயம் காதல் ஒருபோதும் அழியாது என்று அவர்கள் நம்புகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் தொடர்ந்து காதலை தேடுபவர்கள். தங்களை யாராவது ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள் என்று அவர்கள் உணர்ந்தால் அவர்களுக்காக எதையும் செய்வார்கள்.

இதையும் படிங்க.. ரிஷப ராசி நேயர்களே.. உள்குத்து வேலை காத்திருக்கிறது உஷார் !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button