சினிமா

இரண்டாவது படத்திலேயே அஜித் குமாரை ஓவர்டேக் செய்த பிரதீப் ரங்கநாதன் !

தான் நடித்த இரண்டாவது படத்திலேயே, அஜித் குமார் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முந்தி சாதனை படைத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

2025-ம் ஆண்டு வெளியான படங்களில், உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் இருந்தது ‘விடாமுயற்சி’. அஜித் படம் என்பதால் முதல் 3 நாட்கள் வசூல் அதிகப்படியாக இருந்தது. மேலும், சிங்கப்பூரில் ‘விடாமுயற்சி’ நல்ல வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், படத்தின் பொருட்செலவை ஒப்பிடும் போது, எதிர்பார்த்த வசூல் இல்லை எனலாம்.

இதனிடையே, ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முறியடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது ‘டிராகன்’. 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரூ.37 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்த இரண்டாவது படமே, தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் படத்தின் வசூலை முறியடித்திருக்கிறது. இது திரையுலகின் பலரது புருவத்தை உயர்த்த செய்திருக்கிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இந்த படத்தில், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். பிப்ரவரி 21-ம் தேதி வெளியான இப்படம் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button