
சென்னை: ஏப்ரல் 10-ம் தேதி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் ஆகிறது. அதற்கு முந்தைய தின இரவு ப்ரீமியர் காட்சிகளை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் குமார் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறார் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்.
இதையும் படிங்க.. ‘டைகர் கா ஹூக்கும்’ – ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியது !
தற்போது ஏப்ரல் 9-ம் தேதி இரவு 10:30 மணிக்கே ப்ரீமியர் காட்சியை நடத்த முடிவு செய்திருக்கிறார் ராகுல். இதனை தனது எக்ஸ் பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் முன்பே படத்தை திரையிட்டால் விமர்சனத்தால் வசூல் பாதிக்கிறது என்றெல்லாம் சர்ச்சை நிலவி வரும் நிலையில், விநியோகஸ்தரின் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.




