
குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ரூ.5 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.





