தமிழகம்
Trending

தமிழக பட்ஜெட் 2025-26/ மறுபடியும் வருகிறது EL சரண்டர்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆறுதல் !

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் விசயமாக ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈட்டிய விடுப்பு (EL), பெரும்பாலும் சலுகை விடுப்பு என்று அழைக்கப்படுகிறது, இது ஊழியர்கள் பணிபுரிந்த நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காலப்போக்கில் சேகரிக்கும் ஒரு வகை ஊதிய விடுப்பு ஆகும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகை தற்பொழுது அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க.. தமிழக பட்ஜெட் 2025-26/ அதிமுக வெளிநடப்பும்.. எடப்பாடியார் விளக்கமும் !

அதாவது 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button