Uncategorizedஅரசியல்இந்தியா

பாகிஸ்தான் ட்ரோன்களை வானத்திலேயே  சிதறவிட்ட இந்தியா…! கதிகலங்கிய இஸ்லாமாபாத்…!

திடீரென பாகிஸ்தான் ஜம்மு உட்பட எல்லையோர மாவட்டங்களில் பெரியளவில் தாக்குதலை ஆரம்பித்தது. இருப்பினும், இந்தத் தாக்குதலை எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.

ஜம்மு மே 9 2025 :

இந்தியா பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் திடீரென பாகிஸ்தான் ஜம்மு உட்பட எல்லையோர மாவட்டங்களில் பெரியளவில் தாக்குதலை ஆரம்பித்தது.. இருப்பினும், இந்தத் தாக்குதலை எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.

பஹல்காம் தாக்குதல் மூலம்  பதற்றத்தை ஆரம்பித்து வைத்ததே பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பதிலடி கொடுக்கவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அத்துமீறி தாக்குதல்

இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காஷ்மீர் தொடங்கி பஞ்சாப் உட்படப் பல எல்லையோர மாவட்டங்களில் பாகிஸ்தான் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக எல்லையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பிளாக் அவுட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு சைரன்கள் அலறும் நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பித் தாக்குதல் நடத்தினாலும் இதுவரை எந்தவொரு சேதாரமும் ஏற்படவில்லை. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான எஸ் 400 வெற்றிகரமாக மக்களைப் பாதுகாத்து வருகிறது.

பாகிஸ்தானை பந்தாடும் எஸ் 400 :

S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு என்பது உலகின் மிகவும் மேம்பட்ட ஒரு நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். அதாவது இதன் மூலம் மிகப் பரந்த இடத்திற்குப் பாதுகாப்பை வழங்க முடியும். ரஷ்யத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த எஸ் 400 பாதுகாப்பு அமைப்பால் 600 கிமீ தொலைவில் வரும் ஏவுகணை அல்லது ட்ரோன்களை கூட டிராக் செய்ய முடியும். 400 கிமீ தொலைவில் வரும் போது அதைத் தாக்கியும் அழிக்கவும் முடியும்.

கடந்த 2014ஆம் ஆண்டு S-400 ஏவுகணை அமைப்பை முதலில் சீனா வாங்கியது. அதன் பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் இந்த ஏவுகணைகளை வாங்கி வருகிறது. இந்தியா கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த எஸ்400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குகிறது. மொத்தம் 5 யூனிட்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டது.

அந்த யூனிட்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரைக் கவர் செய்கிறது. ஒன்று பஞ்சாப் பதன்கோட் பகுதிகளைப் பாதுகாக்கிறது. மற்றவை ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் முக்கிய பகுதிகளை பாதுகாக்கிறது.

S-400 பாதுகாப்பு அமைப்பில் மொத்தம் 3 பாகங்கள் உள்ளன. அதில் ஒன்று மிஸைல் லாஞ்சர் ( Missile launchers), அடுத்தது சக்திவாய்ந்த ரேடார், கமெண்ட் சென்டர் (command centre) என மூன்று பாகங்கள் உள்ளன. இது விமானங்கள், சாதாரண ஏவுகணைகள், டிரோன்கள், அதிவேகமாக பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கூட இடைமறித்து அழிக்கும்.

S-400 அமைப்பின் நீண்ட தூரத் திறன்கள் காரணமாக நேட்டோ உறுப்பு நாடுகள் இதை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது

S-400 பாதுகாப்பை அமைப்பை வைத்து அனைத்து வகையான நவீனப் போர் விமானங்களையும் கட்டுப்படுத்த முடியும். அதன் ரேடாரில் 600 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கண்காணிக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button