அரசியல்இந்தியா

மகள் திருமண விழாவில் புஷ்பா-2 பாடலுக்கு நடனமாடிய கெஜ்ரிவால்!

புதுடெல்லி ஏப் 19 2025

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புஷ்பா 2 பாடலுக்கு மனைவியுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

டெல்லியில் நடைபெற்ற தங்கள் மகளின் நிச்சயதார்த்த விழாவின் போது, ​​ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் பிரபலமான ‘புஷ்பா 2: தி ரூல்’ பாடலான ‘அங்காரோ கா அம்பர் சா’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார்.

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளின் நிச்சயதார்த்த விழா வியாழக்கிழமை (ஏப்.17 2025) இரவு ஷாங்க்ரி-லா ஹோட்டலில் ஒரு தனியார் நிகழ்வில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் புஷ்பா-2 பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளை பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ பகிர்ந்துள்ளது. அதில், ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடனம் ஆடும் பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் நடனம் ஆடுகிறார். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணம் ஏப்.18ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதாவும் சம்பவ்வும் ஐஐடி டெல்லியில் வேதியியல் பொறியியல் படித்த காலத்தில் சந்தித்தனர். சம்பவ் தற்போது தனியார் துறையில் திட்ட மேலாண்மை ஆலோசகராக பணிபுரிகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button