Uncategorizedஅரசியல்உலகம்

உக்ரைனின் “ஸ்பைடர் வெப்” தாக்குதல் – அதிரடிக்கு தயாராகும் ரஷ்யா…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் நேற்று போன் மூலம் அவசரமாக உரையாடினர். ரஷ்ய போர் விமானங்களுக்கு எதிரான உக்ரைனின் டிரோன் தாக்குதல் குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

மாஸ்கோ ஜூன் 5 2025:

ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது  கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு வீச்சு போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.

பதிலடிக்கு தயாராகும் ரஷ்யா

மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.

சிறிய ரக சூசைட் டிரோன்களை கருப்பு உள்ளிட்ட நிறங்களில் பெயிண்ட் செய்து, மிக தாழ்வாக ரேடாரில் படமால் பறக்கவிட்டு, போர் விமானங்கள் ஹேங்கரில் இருக்கும் போது அருகில் சென்று அதை தாக்கி அழித்து உள்ளது உக்ரைன். சிறிய ரக டிரோன்கள் என்பதால் இதனால் மொத்தமாக போர் விமானங்களை அழிக்க முடியாது

ஆனால் இவை சூசைட் டிரோன்கள். நேராக போர் விமானங்கள் மீது விழுந்து வெடித்து விமானங்களை தீ பிடிக்க வைக்கும். அப்படித்தான் இந்த தாக்குதல்களை உக்ரைன் நடத்தி உள்ளது. இதில் மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் ஆகியவை ரஷ்யாவின் போர் விமானப்படை தளங்களில் முக்கியமானது ஆகும். இதனால் ரஷ்யாவின் விமானப்படை மிக மோசமான, எதிர்பார்க்காத சேதங்களை சந்தித்து உள்ளது.

300க்கும் மேற்பட்ட டிரோன்களை ஒரே சமயத்தில் அனுப்பி ரஷ்யாவின் விமானப்படையை உக்ரைன் அடித்து நொறுக்கி உள்ளது. இதன் மெல்லாம் இரண்டு நாட்டு போர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. போர் கடுமையான நிலையை அடைந்து உள்ளது.

இதற்கு பதிலடி தர ரஷ்யா மிக கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா அடுத்த எந்த கட்டத்திற்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button