அரசியல்தமிழகம்

கூட்டணியை நான் தான் முடிவு செய்வேன்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

கூட்டணியை நானே முடிவு செய்வேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

திண்டிவனம் ஜூன்11 2025:

“நீயா? நானா? பார்த்துவிடுவோம் என முடிவெடுத்துவிட்டேன்” என செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் உடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லியும் அதனை அன்புமணி நம்பவில்லை.


அய்யாவை நம்ப முடியாது; எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்றார், எனக்குள் இருந்த கோவம் பொங்கி எழுந்தது.
நீயா? நானா? பார்த்திடுவோம். என முடிவெடுத்துவிட்டேன்.

7 ஆண்டுகளுக்கு முன்பே பாமகவை கைப்பற்ற நினைத்தார் அன்புமணி.
என்னை நடைப் பிணமாக்கி நாடு முழுவதும் என் பெயரில் நடைபயணம் செல்கின்றனர்; என் கைகளைக் கொண்டே என் கண்களை நான் குத்திக் கொண்டேன்.


பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி செல்லும்போது, அப்பா கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறினார்.
விமானத்தில் சென்னை திரும்பும்போது, தவறாக கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றார். 2 சொட்டு கண்ணீர் விட்டேன்; அது Flight-ன் தரையில் விழுந்தது.


“2026 தேர்தல் வரை நானே பாமக தலைவராக நீடிப்பேன்”. இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவரா நீடிக்க எனக்கு உரிமை இல்லையா? என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தையை மிஞ்சிய தனையன் கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம்.

பாமகவுடன் கூட்டணி வைக்க விரும்புவோருக்கு யாரிடம் பேச வேண்டும் என்பது தெரியும். தேர்தல் கூட்டணி குறித்து நான்தான் முடிவெடுப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button