அரசியல்இந்தியா

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாது – சி.ஆர் பாட்டீல் உறுதி

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என இந்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி ஏப்ரல் 26 2025

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி 26 அப்பாவி மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் கொன்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானுக்குள் ஒரு சொட்டு நீர் கூட பாய இந்தியா அனுமதிக்காது என்று ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் வெள்ளிக்கிழமை (ஏப்.25 2025) தெரிவித்தார்.

சி.ஆர் பாட்டீல் ட்வீட்

இதற்கிடையில் சி.ஆர் பாட்டீல், “இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு சொட்டு தண்ணீர் கூடப் பாயாமல் பார்த்துக் கொள்வோம்” என மேலும் கூறினார். இது தொடர்பாக சி.ஆர். பாட்டீல் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த மோடி அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு சட்டபூர்வமானது மற்றும் தேசிய நலனுக்கானது. ஒரு சொட்டு சிந்து நதி நீர் கூட பாகிஸ்தானுக்குள் பாயாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றார்.

1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button