தமிழகம்

டாஸ்மாக் முறைகேடு.. முற்றுகை போராட்டத்திற்கு முயன்ற அண்ணாமலை கைது !

சென்னை; டாஸ்மாக் முறைகேடுகளை எதிர்த்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இனி தேதி அறிவிக்காமலே போராட்டம் நடத்துவோம், மு.வரை கூட முற்றுகையிடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் ஊழல் புகாரில் தமிழக அரசுக்கு எதிராக சென்னை எழும்பூரில் பாஜக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இதில் பங்கேற்கச் சென்ற அண்ணாமலையை அக்கரை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அவர் செய்தியாளர்களிடம், “மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். திமுக மாபெரும் தவறு செய்துள்ளதால் தான் பயப்படுகிறார்கள். ஜனநாயகப் போராட்டத்தைத் தடுக்கிறார்கள். அடுத்த போராட்டம் எந்தத் தேதியிலும் நடக்கலாம். மு.வர் வீடாக இருந்தாலும் முற்றுகையிடுவோம். மு.வரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார், அவரும் தப்ப முடியாது.

செந்தில் பாலாஜி உத்தமரா? இந்தியாவின் மோசமான அரசியல்வாதி அவர்தான். அவர் அமைச்சராகத் தொடர தார்மீக உரிமை இருக்கிறதா என்று உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது. இவர்கள் நல்லவர் வேஷம் போடுகிறார்கள்.

தமிழகத்தில் நல்ல அரசியலைக் கொண்டு வர பாஜக போராடுகிறது. மு.வர் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024 தேர்தலை டாஸ்மாக் பணத்தில் தான் திமுக சந்தித்தது. 2026-லும் அப்படித்தான். ஊழல் செய்யவில்லை என்றால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும்” என்றார்.

கைதுக்கு முன் தனது எக்ஸ் தளத்தில், “ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். பயந்து போன திமுக அரசு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் அதிகாரிகளைப் பயன்படுத்துகிறீர்கள். தேதி அறிவித்துப் போராட்டம் நடத்தியதால் தானே இப்படிச் செய்கிறீர்கள்? திடீரென்று போராடினால் என்ன செய்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில், “டாஸ்மாக் முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தலைவர் அண்ணாமலையை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. முதல் குற்றவாளி மு.வர், இரண்டாவது செந்தில் பாலாஜி. 3 F.I.R.-களை வைத்து தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. டாஸ்மாக்கில் 40% சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுகிறது” என்று குரிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button