தமிழகம்

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தல்

சென்னை: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இணங்கி அகற்றும்படி கட்சியினருக்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அமைப்புகளின் கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 06.03.2025 அன்று இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தங்களது பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழக கொடிக் கம்பங்களை மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பை ஏற்று 15 நாட்களுக்குள் அகற்றிட வேண்டும். அகற்றப்பட்ட கொடிக் கம்பங்கள் குறித்த விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button