Uncategorized

டிரம்ப் முன்னாள் மருமகளுடன் காதலை உறுதி செய்த டைகர் வுட்ஸ் !

உலகப் புகழ்பெற்ற கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முன்னாள் மருமகளான வனேசா டிரம்ப்புடன் காதல் வாழ்வில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிர்ந்த புகைப்படத்துடன், நீ என் பக்கத்தில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பதிவிட்ட அவர், தன் புதிய உறவை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

டைகர் வுட்ஸ், டிரம்ப் குடும்பத்துடன் நீண்டகாலமாக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர். 2019-ம் ஆண்டு, அவர் “Presidential Medal of Freedom” விருது பெற்றபோது, அதை டொனால்டு டிரம்ப் நேரடியாக வழங்கினார்.

வனேசா டிரம்ப் மற்றும் டைகர் வுட்ஸ் சில மாதங்களாக தனிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்பட்ட நிலையில், இவர்களுக்குள் காதல் மலர்ந்திருப்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. குறிப்பாக, கடந்த ஆண்டு ஒரு தனியார் கோல்ப் நிகழ்வில் இருவரும் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் வெளியானது.

வனேசா, டிரம்ப்பின் மகனான டொனால்டு டிரம்ப் ஜூனியர்-இன் முன்னாள் மனைவியாக, அவருடன் ஐந்து குழந்தைகளை கொண்டுள்ளர். 2018-ல் திருமணமுடிவுக்கு வந்த பின்னர், தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், டைகர் வுட்ஸ் தனது நீண்டகால உறவுகளிலிருந்து வெளியேறி, புதிய காதல் வாழ்வைத் தொடங்கியுள்ள செய்தி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button