வணிகம்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்- நகை பிரியர்கள் சோகம் !

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை பவுன் ரூ.65,840- என, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் நகை பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 14-ஆம் தேதி) கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,230-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. நேற்று கிராமுக்கு ரூ.55 என பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120, ஒரு பவுன் ரூ.64,960 என உயர்ந்தது. இதன்மூலம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.65,000-ஐ நெருங்கியது. இந்நிலையில், இன்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த புதிய உச்சம் திருமணம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக தங்கம் வாங்கும் சாமானிய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button