தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்

“குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம்..!”

உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு.

“எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல்.
மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்தது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம்.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்தது சட்டவிரோதம்.
ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது; மாநில அரசின் ஆலோசனைபடியே செயல்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.
பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.
மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம்.
மசோதாக்கள் மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் – தமிழக அரசு தவடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்.





