தமிழகம்

இனி நானே தலைவர் – டாக்டர் ராமதாஸ்

இனி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நானே – மருத்துவர் ராமதாசு.

அன்புமணி ராமதாசை பாமகவின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் – ராமதாசு.

மற்ற பொறுப்பாளர்கள் தற்போது உள்ளவாறே தொடர்ந்து செயல்படுவார்கள்.

இனி பாமகவினர் தீவிரமாக செயல்பட்டு தேர்தல் வெற்றிக்கு பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முன்னதாக பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழி நடத்தவே பாமகவின் தலைவராகும் இந்த முடிவை எடுத்தேன் – மருத்துவர் ராமதாசு.

நான் தலைவரானதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அது அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது.

கூட்டணி குறித்த விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்பேன் – பாமக நிறுவனர் ராமதாசு.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை கட்சியின் நிறுவனராக இருந்தாலும், கட்சியின் தலைவராக அவரது மகன் அன்புமணி ராமதாஸ் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், “2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இளைஞர்களை சரியான வழியில் வழிநடத்த வேண்டும் என்பதற்காக கட்சித் தலைவர் பொறுப்பையும்  நானே ஏற்கிறேன். இனி அன்புமணி ராமதாஸ் செயல் தலைவர் பொறுப்பில் மட்டுமே இருப்பார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளைக் கொண்டு விரைவில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடத்தி மேலும் முடிவுகளை எடுக்கப்படும்” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், 2024 டிசம்பரில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமை இளைஞர் பிரிவு தலைவராக நியமிக்க முன்வந்தபோது, அன்புமணி ராமதாஸ் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அன்று முதல் தந்தை-மகன் இடையே உறவுகளில் பதட்டம் நிலவியது. கட்சி மூத்த நிர்வாகிகள் இடையேயான பேச்சுவார்த்தைகளால் இந்த பிரச்சினை தீர்ந்ததாக எண்ணியிருந்த நிலையில், தற்போது ராமதாஸ் எடுத்துள்ள இந்த முடிவு கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button