தமிழகம்

அமித்ஷா – வின் வியூகத்தை உடைத்தெறிவார் முதலமைச்சர் – அமைச்சர் ரகுபதி

https://we.tl/t-ILVD2ccCnZ

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னம்பட்டி ஓட்டக்குளம் கண்மாயினை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ரூபாய் ஒன்பதரை கோடி மதிப்பில் அதன் அசல் தரத்திற்கு உயர்த்துதல் மற்றும் மீட்டெடுக்கும் பணியினை இன்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாகத் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இந்திய அரசியலில் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி, ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டு மாநில அரசுக்கு உதவியாக இருப்பவரே தவிர உபத்திரம் செய்யக்கூடியவராக இருக்க கூடாது என்பது தான் இன்றைய நிலைபாடு, அதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது…

இந்திய அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியை நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப் போராட்டம் மூலம் பெற்று தந்துள்ளார். நமது உரிமையை நிலை நிறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
வளைந்து நெளிந்து ஏற்கனவே பாஜகவோடு கொஞ்சி குலாவினார். அவர்களின் ஆட்சியை காப்பாற்ற போராட்டம் நடத்தினர். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கூடிய சூழ்நிலையில் மேலவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதற்காக அவர்களைக் காப்பாற்றுவதற்கு கூச்சலிட்டு நாடாளுமன்றத்தையும் மேலவையையும் முடங்கச் செய்தார். அப்படியெல்லாம் பாஜகவுக்கு உதவி செய்து ஒத்துழைப்பு நல்கி எதற்கும் நன்றாக வளைந்து கொடுக்கக்கூடிய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவரது காலத்திலேயே அவர் கூறுவதை எல்லாம் பெற்று இருக்கலாமே? அதை விட்டுவிட்டு தற்போது எங்கள் மீது பழி போடுகிறார். யார் செய்ய வேண்டும் ஒன்றிய அரசு தான் அதனை செய்ய வேண்டும். ஒன்றிய அரசோடு மிக நெருக்கமாக இருந்த  ஒரே அரசு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு தான்.

அமித்ஷா வருகை அவர்களது கட்சி விவகாரம். இதை நாங்கள் பார்க்கவில்லை எங்களை பொறுத்த வரை நாங்கள் தெளிவாக இருக்கிறோம் எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது தெளிவாக இருக்கிறோம் மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்தால் போதும் அந்த அளவிற்கு தமிழ்நாடு மக்களிடத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கி இருக்கின்ற அரசு தமிழ்நாடு முதலமைச்சரின் அரசு. இந்த ஆட்சிக்கு எதிரான எந்த விதமான மனநிலையும் மக்களிடத்தில் கிடையாது. அப்படிப்பட்ட அரசை தமிழ்நாட்டு முதலமைச்சர் நடத்தி வருகிறார்.

அமித்ஷாவின் டார்கெட்டை உடைத்து எறிவார் நொறுக்கி எறிவார் எங்கள் முதலமைச்சர்.

வந்த நிதி எவ்வளவு கொடுத்த நிதி எவ்வளவு என்பதை வெளிப்படையாக சொன்னார்கள் என்றால் மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்தோம் கொடுக்கும் என்று கூறுகிறாரே எங்களிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றீர்கள். உங்களுடைய பத்தாண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலையில் எங்களுடைய வருவாய் எந்த அளவிற்கு பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் நிதி கொடுத்திருக்கிறீர்களா. உத்திரபிரதேசத்திற்கும் பீகாருக்கும் ஆந்திராவுக்கும் கொடுப்பதை போல தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்து உள்ளீர்களா? மகாராஷ்டிரா ராஜஸ்தான் மாநிலத்திற்கு கொடுப்பது போல நிதி கொடுத்துள்ளீர்களா? இதையெல்லாம் வைத்து ஒப்பிட்டு பார்க்கலாம் கணக்கை தர சொல்லுங்கள். நாங்கள் எந்த இடத்திலும் இதைப் பற்றி பேசுவதற்கு தயாராக இருக்கிறது. தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை எங்களால் தெளிவாக சொல்ல முடியும். அவர்கள் வேண்டுமென்றால் வார்த்தைக்கு சொல்லலாம் அள்ளிக் கொடுத்தோம் என்று. ஆனால் அவர்கள் அள்ளிக் கொடுக்கவில்லை கிள்ளி கொடுத்திருக்கிறார்கள்.

பேசும்போது ஒருவர் கேஷுவலாக பேசுவது என்பது இயற்கை. வேண்டும் என்று யாரும் தவறுதலாக பேசுவது என்பது கிடையாது. திமுகவின் கொள்கையை முன்னிறுத்தி தான் நாங்கள் பேசுவோம். எங்கேயாவது பேசும்போது கேஷுவலாக ஸ்லிப்பாகி வார்த்தைகள் வருவதுதான். மூத்த அமைச்சர் பொன்முடி பற்றி கருத்து சொல்ல உரிமை எனக்கு கிடையாது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பார். நடவடிக்கை எடுப்பது என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் தான் எடுப்பார். இதுகுறித்து நாங்கள் பேசுவதற்கான உரிமை கிடையாது. நான் பேசவும் கூடாது.

பாமக தலைவராக ராமதாஸ் ரிட்டன் பேக் வந்துள்ளார். பாமக கடைசி வரை காத்திருப்பார்கள் எங்களிடம் இடம் இருந்தால் எங்களிடத்தில் வருவார்கள் அவர்களிடத்தில் இடம் இருந்தால் அவரிடத்தில் செல்வார்கள். இதையெல்லாம் நிரந்தரமாக சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்தவரை ஒன்று மட்டும் கூறுகிறோம். எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை கூட இழக்க எங்கள் தலைவர் மு க ஸ்டாலின் தயாராக இருக்க மாட்டார். கூடுதலாக ஒற்றைக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் அவருடைய சம்பந்தம் இருந்தால் இதில் வருமே தவிர நாங்கள் தனித்து எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். எங்களுடைய கட்சியை பொறுத்தவரை கூட்டணி என்பது வலிமையாகவும் பலத்தோடும் அசைக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அந்த அளவிற்கு வலிமையாக எங்கள் முதலமைச்சர் கட்சித் தலைவர் கொண்டு செல்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவ்வளவு காலத்திற்கு ஒரு கூட்டணியை தக்க வைக்க முடியாது. அப்படி இருக்கையில் ஒரு கூட்டணியை தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் ஆற்றல் உள்ள ஒரே தலைவர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான்.

எங்கள் கூட்டணியை உடைக்க முடியாது நொறுக்க முடியாது. உடைத்தால் அவர்கள் உடைவார்களே தவிர நாங்கள் உடைய மாட்டோம்.

சாணக்கியரைவிட மிகப்பெரிய ராஜதந்திரி தமிழ்நாடு முதலமைச்சர். அவருக்கு முன்பு அனைத்தும் அடிபட்டு போகும். அமித்சாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது.

ஆளுநர் பதவி விலகாததும் அவர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளாததும் அவர்களுக்கே உண்டான வெளிச்சம். இந்த தீர்ப்புக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்திருக்கலாம் அல்லது ஒன்றிய அரசு அவரை திரும்ப  அழைத்து இருக்கலாம். இரண்டு நிலையிலும் இல்லாமல் அவர் தொடலாம் என்றால் தொடர்ந்திருக்கட்டும். எங்களுக்கு அதைப் பற்றி கவலை கிடையாது இனி நாங்கள் ஆளுநர் மாளிகை போக வேண்டியது இல்லை கோப்பை அனுப்பினால் போதும் கையெழுத்தாகி விடும். இனி அனைத்து மசோதாக்களும் தானாக கையெழுத்தாகி வந்துவிடும். முதல் தடவை அனுப்பினால் அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள் கையொப்பமிட வேண்டும் இரண்டாவது முறை அனுப்பிவிட்டால் உடனடியாக கையொப்பம் போட வேண்டும். நேர நிர்ணயம் வந்த பிறகு இனி நாங்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநர் சந்தேகம் கேட்டால் அதற்கு பதில் அளிக்கப்படும்.

நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் எல்லா பல்கலைக்கழகத்திற்கும் வேந்தராக தமிழ்நாடு முதலமைச்சர் வந்துவிடுகிறார் அந்த பத்து மசோதாக்கள் படி. பதவியேற்பு மற்ற விஷயங்கள் எல்லாம் இனி நடைபெற வேண்டிய விஷயங்கள் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button