அரசியல்தமிழகம்

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரானார் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றார்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருந்தது. இதனையடுத்து நேற்று விருப்பமனுவை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்தார்.

பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாத நிலையில், நைனார் நாகேந்திரன் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து இன்று, சென்னையில் அவர் பதவியேற்பதற்கான விழா நடைபெற்றது. விழாவில் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருப்பதி லட்டு சாப்பிட்டு, பதவி பிரமாணத்தில் கையெழுத்திட்டார் நைனார் நாகேந்திரன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button