உலகம்சினிமா

2 நாட்களில் 1.72 லட்சம் பவுண்ட்களை குவித்த #GoodBadUgly

லண்டனில் அஜித்குமாரின் ‘Good Bad Ugly’ திரைப்படம் 2 நாட்களில் 1.72 லட்சம் பவுண்ட்-களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் பிரபு, பிரசன்னா, த்ரிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான குட் பேட் அக்லி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் 10-ம் தேதி வெளியானது. லண்டனில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த அஜித்தின் திரைப்படம் என்ற சாதனையை நேற்று படைத்திருந்தது

லண்டன் மற்றும் அயர்லாந்தில் 2 நாட்களில் 1.72 லட்சம் பவுண்ட்-களை கடந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு

இது இந்திய மதிப்பிற்கு ரூ. 1.93 கோடி ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button