வீட்டு லோன் வட்டியை குறைக்க யோசனை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாக இரண்டு முறை குறைத்துள்ளது.இந்த வார தொடக்கத்தில், மத்திய வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆகக் குறைத்தது.

இது, ஹோம் லோன் வாங்கிய நபர்களுக்கு நற்செய்தி ஆகும். இதற்கு முன்பு, பிப்ரவரியில் இதேபோன்ற வித்தியாசத்தில் விகிதம் குறைக்கப்பட்டது. மேலும் இந்த குறைப்பு 2025-26 நிதியாண்டின் எஞ்சிய காலத்திலும் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், பெரும்பாலான வீட்டுக் கடன்கள் இப்போதெல்லாம் மிதக்கும் விகிதங்களில் வழங்கப்படுகின்றன, இவை ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், ரெப்போ விகிதம் திருத்தப்பட்டவுடன், பெரும்பாலான வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை மதிப்பாய்வு செய்து வட்டி விகிதங்களை சரிசெய்கின்றன.

இந்த நிலையில், வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை குறைப்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி, உங்களது கிரெடிட் ஸ்கோரை முதலில் மேம்படுத்துங்கள். இரண்டாவதாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹோம் லோனின் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கவும். மூன்றாவதாக, ஹோம் லோனின் வட்டி விகிதத்தை குறைக்க வங்கியை கோரலாம்.

அடுத்து ஹோம் லோன் வங்கியை மாற்றுவது. உங்கள் வங்கி சிறந்த வட்டி விகிதத்தை வழங்க மறுத்தால், உங்கள் கடனை வேறு வங்கிக்கு மாற்றலாம். இதற்காக, நீங்கள் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து, மலிவான விகிதத்தில் கடன்களை வழங்கும் கடன் வழங்குநர்களைக் கண்டறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




